1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (13:07 IST)

2 நாள் மழையில் 35 ஏரிகள் நிரம்பிவிட்டது. திருவள்ளூர் கலெக்டர் தகவல்

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்து வருகின்றது. இதனால் இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகள் குறிப்பாக ஏரிகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன



 
 
கடந்த இரண்டு நாட்களில் பெய்த கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 35 ஏரிகள் நிரம்பிவிட்டதாக திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி இன்று தெரிவித்துள்ளார். 
 
சென்னையிலும் இரண்டு நாள் மழையில் செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 150 மி.கனஅடி அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் 308 மி.கனஅடி இருந்த நீர் இருப்பு இன்று 452 மி.கனஅடியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 85.40 அடி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதே போன்று மழை இன்னும் சில நாட்கள் தொடர்ந்து பெய்தால் செம்பரப்பாக்கம் ஏரி நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.