வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (18:10 IST)

கூடுவாஞ்சேரி ஏரி உடைந்தது. விடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம்

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அனைத்து நீர்நிலைகளும் வெகுவேகமாக உயர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள பல ஏரிகள் நிரம்பி வருவதால் ஏரி உடையும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது.


 


இந்த நிலையில் சற்றுமுன்னர் கூடுவாஞ்சேரி தாங்கல் ஏரி உடைந்துவிட்டதாகவும், நந்திவரம் ஏரி உடையும் அபாயத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே நந்திவரம் மற்றும் தாங்கல் ஏரி உடையும் ஆபத்து இருப்பாதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எடுத்துரைத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த ஏரி உடைந்ததன் காரணமாக மேற்கு தாம்பரம் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு மாறி வருகின்றனர். கடந்த 2015ஆம்  ஆண்டிலும் இதே பகுதியில் வெள்ளம் சூழ்ந்து பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது