வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 26 ஜூன் 2017 (11:37 IST)

170 பயணிகளோடு நீரில் மூழ்கிய சுற்றுலா படகு: அதிர்ச்சி வீடியோ!!

கொலம்பியாவில் 170 பயணிகளை ஏற்றி சென்ற சுற்றுலா படகு ஒன்று நீரில் மூழ்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
கொலம்பியாவில் உள்ள பீநோல் ஏரியில் 170 பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா படகு ஒன்று சென்றது. ஏரியின் நடுவே, படகு திடீரென நீரில் மூழ்க தொடங்கியது. 
 
படகிலிருந்த மக்கள் பயத்தினால் அங்கும் இங்குமாக ஓடியதில் அழுத்தம் மேலும் அதிகமாகி படகு முற்றிலுமாக  மூழ்கியது.
 
இந்த துயர சம்பவத்தில் 9 பேர் பலியானதாகவும், 28 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், 99 பேரை மீட்பு குழுவினர்கள் மீட்டதாகவும், 40 பேர் நீந்தி வந்து கரையை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
படகு, நீரில் மூழ்கியதற்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை. காணாமல் போன சுற்றுலா பயணிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.