வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (09:43 IST)

வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது! – பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!

வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் தனியார் மயமாக்கும் போக்கை எச்சரித்தும், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பணிக்கு திரும்பும்படி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி அரசு பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இன்று பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். பணிக்கு வராமல் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் வருகை பதிவை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.