விலைவாசியை ஆண்டவனாலேயே கட்டுப்படுத்த முடியாது! – செல்லூர் ராஜு!
நாட்டில் ஏற்பட்டு வரும் விலைவாசி உயர்வை ஆண்டவானாலேயே கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
சமீபத்தில் வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் வெங்காய பற்றாக்குறை ஏற்பட்டு விலையேற்றம் உண்டானது. மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு விலையை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில் சட்டபேரவையில் ஆளுனர் உரைக்கு நன்று தெரிவிக்கும் தீர்மானத்தில் ஏற்பட்ட விவாதத்தில் வெங்காய விலை உயர்வு குறித்து திமுக உறுப்பினர் கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் விலைவாசி உயர்ந்ததாக கூறியுள்ளார்.
அப்போது எழுந்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ “மக்களின் வருமானம் அதிகரிக்கும்பொது விலைவாசியும் அதிகரிக்கிறது. இப்போதெல்லாம் ஷாப்பிங் மால்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விலைவாசி உயர்வை ஆண்டவனே நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார்.