1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2017 (19:40 IST)

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் அடாவடி: ரயிலில் ஆயுதங்களுடன் பயணம்; பயணிகளுக்கு அச்சுறுத்தல்!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் அடாவடி: ரயிலில் ஆயுதங்களுடன் பயணம்; பயணிகளுக்கு அச்சுறுத்தல்!

சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சென்னை புறநகர் ரயிலில் கத்தி, அறிவாள், கம்புகளுடன் பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சென்னையிலிருந்து நெமிலிச்சேரிக்கு செல்லும் புறநகர் ரயிலில் மாணவர்கள் கத்தி, கம்பு, அறிவாள், பட்டாசு என அபாயகரமான பொருட்களுடன் ரயிலில் தொங்கியபடி பொதுமக்களை மிரட்டும் விதமாக பயணம் செய்துள்ளனர்.
 
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என கூறப்படுகிறது. இது பயணிகளுக்கு அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நன்றி: News7
 
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டது உறுதியானால் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என பச்சையப்பன் கல்லூரி முதல்வர் காளிராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், தேவைப்பட்டால் டிஸ்மிஸ் நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.