திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2017 (18:52 IST)

அதிகமான துரோகங்களை ஒரே நேரத்தில் சந்தித்தது யார் தெரியுமா?: பதில் கூறுகிறார் கருணாஸ்!

அதிகமான துரோகங்களை ஒரே நேரத்தில் சந்தித்தது யார் தெரியுமா?: பதில் கூறுகிறார் கருணாஸ்!

அதிமுக ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பல அணிகளாக பிரிந்த போது பலரும் மாறி மாறி அணிகள் மாறினர். ஆனால் கூட்டணி கட்சியை சேர்ந்த கருணாஸ் தற்போது வரை சசிகலா அணியில் இருந்து அவர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.


 
 
தனக்கு எம்எல்ஏ சீட் ஜெயலலிதா வழங்கினாலும், அதற்கான வாய்ப்பை உருவாக்கி தந்தது சசிகலாதான். எனவே அவருக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன் என பகிரங்கமாக கூறிய கருணாஸ் தனது ஆதரவு நிலைப்பாட்டை தற்போதும் தெரிவித்துள்ளார்.
 
பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கருணாஸ், இந்த உலகத்திலேயே அதிகமான துரோகங்களை ஒரே நேரத்தில் சந்தித்தது யார் என்றால் அது சசிகலாதான் என கூறியுள்ளார். மேலும் யார் ஒருவர் மக்களை முட்டாளாக நினைக்கிறாரோ, அவர் தான் இந்த உலகத்திலேயே அடிமுட்டாள். காசு கொடுத்தால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்பதுபோலத்தான் இவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன என எடப்பாடி தரப்பையும் விமர்சித்துள்ளார் கருணாஸ்.