எடப்பாடி பழனிச்சாமியை முந்த ஓபிஎஸ் போட்ட ரகசிய கூட்டம்!
எடப்பாடி பழனிச்சாமியை முந்த ஓபிஎஸ் போட்ட ரகசிய கூட்டம்!
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நவம்பர் 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை துணை முதல்வர் ஓபிஎஸ் பார்வையிட்டு வருகிறார்.
தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் மாவட்ட அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்ட ஓபிஎஸ் மாவட்ட அளவில் உள்ள சுயஉதவி குழுக்கள் 20 ஆயிரம் பேரை அழைத்து வரவேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர் கழகம் மற்றும் கிளை பொறுப்பாளர்களை பெரியகுளம் அருகே உள்ள பண்ணை வீட்டுக்கு அழைத்து ஓபிஎஸ் ரகசிய கூட்டம் போட்டதாக தகவல்கள் வருகின்றன.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அந்தந்த பகுதியில் இருந்து அதிகமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களையும் அழைத்து வரச்சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ். குறிப்பாக சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய கூட்டத்தை விட அதிகமாக கூட்டத்தை தேனியில் கூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.