ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 9 அக்டோபர் 2017 (18:44 IST)

நைஜிரிய வாலிபர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட டெல்லி மக்கள்

தெற்கு டெல்லியில் திருட முயன்ற நைஜிரிய வாலிபரை அப்பகுதி மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.


 

 
தெற்கு டெல்லியின் மால்வியா நகர்ப் பகுதி ஆப்பரிக்க மாணவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. கடந்த மாதம் செப்டம்பர் 24ஆம் தேதி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நைஜிரிய வாலிபர் ஒருவர் திருட முயற்சித்துள்ளார். அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் போது நைஜிரியர் கால்களை தாங்கி நடந்துள்ளார். அதுகுறித்து காவல்துறையினர் கேட்டதற்கு விரட்டி பிடிக்கும் தவறி விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் பிடிப்பட்ட நைஜிரிய வாலிபரை அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் முன் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 
மக்கள் அந்த நைஜிரிய வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து கட்டையால் அடித்துள்ளனர். அவர் தன்னை விட்டுவிடுமாறு கதறியும் கடுமையான தாக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்ற பின் சிறையில் அடைத்துள்ளனர்.