தொடர்புடைய செய்திகள்
- ஆன்லைன் பாடம் படிக்காததால் 4 வயது மகனை கொலை செய்த தாய்: அதிர்ச்சி தகவல்
- கல்லூரி வகுப்புகள் தொடக்கம் !
- ஆகஸ்டு 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்! – பேராசிரியர்கள் கல்லூரி வர உத்தரவு!
- ஆன்லைன் ரம்மிய விட முடியாது! விரைவில் புது சட்டம்! – அமைச்சர் ரகுபதி உறுதி!
- ஆன்லைன் ரம்மி மீதான தடை நீக்கம்! – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கேமிரா ஆர்டர் செய்த வாலிபருக்கு பெயிண்ட் டப்பாவை அனுப்பிய ஆன்லைன் நிறுவனம்
கேமிரா ஆர்டர் செய்த வாலிபருக்கு பெயிண்ட் டப்பாவை அனுப்பிய ஆன்லைன் நிறுவனம்
கேமரா ஆர்டர் செய்த சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஆன்லைன் நிறுவனம் பெயிண்ட் டப்பாவை அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த வினோத் என்ற வாலிபர் 28 ஆயிரம் மதிப்புள்ள கேமரா ஒன்றை ஆன்லைன் நிறுவனத்தில் ஆர்டர் செய்தார். சலுகை விலையில் அந்த கேமரா 26,500 ரூபாய் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அதனை அவர் 12 மாத தவணைகளில் ஆர்டர் செய்ததாக தெரிகிறது
இந்த நிலையில் சமீபத்தில் பார்சல் வந்தவுடன் அதை அவர் ஆசையுடன் பிரித்து பார்த்தபோது அதில் போலி கேமரா ஒன்றும் பெயிண்ட் டப்பா ஒன்றும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்
இதனை அடுத்து அவர் ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது உரிய பதில் கிடைக்காததை அடுத்து அவர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
26 ஆயிரம் மதிப்புள்ள கேமராவை ஆர்டர் செய்த வாலிபருக்கு நூறு ரூபாய் மட்டுமே மதிப்புள்ள பெயிண்ட் டப்பா டெலிவரி செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்
