தொடர்புடைய செய்திகள்
- மேகதாது அணைகட்ட எதிர்ப்பு - திட்டமிட்டபடி போராட்டம்: அண்ணாமலை உறுதி!
- மேகதாது விஷயத்துல பாஜக ரெட்டை வேஷம் போடுது! – கமல்ஹாசன் குற்றச்சாட்டு!
- மருத்துவரிடம் ₹ 2.50 லட்சம் நூதன கொள்ளை!
- தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் ஐடியா இல்லை – மத்திய அரசு!
- முறைப்படி கூப்பிட்டும் எடப்பாடியார் பங்கேற்கவில்லை! – துரைமுருகன் விளக்கம்!
ஆன்லைன் ரம்மி மீதான தடை நீக்கம்! – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மீது விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் பலரும் பாதிக்கப்படுவதாக பலரும் குற்றம் சாட்டிய நிலையில் தமிழக அரசு புதிய சட்டம் வாயிலாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்தது. இதுகுறித்து சம்பந்தபட்ட நிறுவனங்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மொத்தமாக தடை விதிக்க முடியாது என்று கூறி ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் மீதான தடையை நீக்கியுள்ளது. மேலும் தமிழக அரசு தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றலாம் என்றும் அதற்கு தடை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
