தொடர்புடைய செய்திகள்
- எமர்ஜென்சியே பாத்துட்டோம்.. இவர்லாம் பொருட்டே இல்ல! – அண்ணாமலைக்கு கே.என்.நேரு பதிலடி!
- வலிமை அஜித்தின் அட்டகாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
- ஆகஸ்டு 14ம் தேதி முப்பெரும் விழா! – கோலகலமாக தயாராகும் சட்டமன்றம்!
- உள்ளாட்சி தேர்தலில் திமுக – காங். கூட்டணி இல்லையா? – எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு!
- வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஆகஸ்டு 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்! – பேராசிரியர்கள் கல்லூரி வர உத்தரவு!
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்க உள்ள நிலையில் பேராசிரியர்கள் கல்லூரி வர உத்தரவு வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியாகின.
அதை தொடர்ந்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள உயர்கல்வி துறை ஆகஸ்டு 9 முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என அறிவித்துள்ளது. மேலும் அனைத்து கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகஸ்டு 9 முதல் கல்லூரிகளுக்கு நேரடியாக செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
