செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Updated : சனி, 1 மே 2021 (00:10 IST)

பாதங்களில் உண்டாகும் சுருக்கங்களை போக்கும் 2வழிகள் !!

பாதத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால், நமக்கு குதிகால் வீக்கம், பங்கஸ் தொற்று, கால் வீக்கம் எல்லாம் வரும்.
 
 
ஆண்களை காட்டிலும் பெண்களின் பாதங்களை உற்றுநோக்கினால் சுருக்கங்களை பார்க்க முடியும். பாதங்களில் உண்டாகும் சுருக்கங்களை வீட்டிலேயே எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்போம்.
Ads by 
 
பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும். வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும்  கிருமிகளை ஒழிக்கும்.
 
தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷினால் சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பின்பு பாதங்களை  ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.
 
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 3 தேக்கரண்டி, ஆப்பிள் சீடர் வினிகர் - அரை டீஸ்பூன் அளவு, தயிர் - 5 டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன்.
 
அரிசி மாவுடன் அனைத்து பொருள்களையும் சேர்த்து நன்றாக குழைக்கவும். தயிர் பற்றாக்குறை இருந்தாலும் மீண்டும் தேவையான அளவு சேர்க்கலாம். பாதங்களை மிதமான வெந்நீரில் வைத்து 10-15 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும்.
 
பிறகு இந்த கலவையை பாதங்களில் தடவி மெதுவாக தேய்த்து தேய்த்து மசாஜ் செய்தபடி தடவவும். கணுக்காலின் கீழிருந்து பாதங்களின் மேல் பகுதி கீழ்பகுதி என அனைத்து இடங்களிலும் இதை தடவி விடவேண்டும். பிறகு பாதத்தை கீழே இறக்காமல் வைத்திருந்து உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தமான துணியால் ஒற்றி எடுத்து மாய்சுரைசர் தடவவும்.