1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:57 IST)

கலைஞர் வசனம் அனல் பறக்கும்; என் அப்பா கலைஞர் ரசிகர்! – மனம் திறந்த ஓபிஎஸ்!

மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்கும் அறிவிப்பிற்கு எதிர்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு மெரீனாவில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்த துணை எதிர்கட்சி தலைவர் ஓ.பன்னீர்செல்வம் “என் தந்தை தீவிரமான கலைஞர் ரசிகர். அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் அதை நாங்கள் எடுத்து படிப்போம். அவரின் வசனத்தில் அனல் பறக்கும். பின்னடைந்த சமூகங்களை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது” என கூறியுள்ளார்.