பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக அமெரிக்கா நடத்தியது: அமைச்சர் கவாஜா ஆசிப் ஆவேசம்!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா தனது சுயநலத்திற்காக பாகிஸ்தானை பயன்படுத்திக் கொண்டு, காரியம் முடிந்தவுடன் அதை "டாய்லெட் பேப்பரை விட மோசமாக" தூக்கி எறிந்துவிட்டதாக அவர் மிக காட்டமாக சாடியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்காவுடன் இணைந்திருக்கக் கூடாது என்றும், 1999-க்கு பிறகு எடுக்கப்பட்ட அந்த முடிவு பாகிஸ்தானுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும், 1980களில் சோவியத் யூனியனுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னெடுத்த புனிதப் போர் என்பது மத கடமையல்ல, அது முழுக்க முழுக்க அமெரிக்காவின் அரசியல் தேவைக்காக திணிக்கப்பட்டது என்றும் அவர் பகிரங்கமாக தெரிவித்தார்.
ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரஃப் போன்ற இராணுவ ஆட்சியாளர்கள் நாட்டை பிற நாடுகளின் போரில் சிக்க வைத்ததாகவும், அதனால் இன்றும் பாகிஸ்தான் வன்முறை மற்றும் பொருளாதார சிக்கலில் தவிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
Edited by Siva