புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:15 IST)

சேலம் ரயில் பாதையில் கொட்டி கிடந்த பணம்! – ஆசையாக சென்று ஏமாந்த மக்கள்!

சேலம் அருகே ரயில் பாதையில் பணம் கொட்டி கிடப்பதாக மக்கள் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்ட எல்லையான தோப்பூர் அருகே ரயில் பாதையில் 2000 ரூபாய், 500 ரூபாய் பணம் ஏராளமாக கொட்டிக்கிடப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியுள்ளது. இதனால் சுற்றுபுறத்தில் மக்கள் பலர் அவ்விடத்தில் குவிந்ததாக வெளியான தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தாள்கள் சிறுவர்கள் விளையாடும் பொம்மை பணம் என தெரிய வந்துள்ளது. இதனால் ஆசையோடு வந்த மக்கள் ஏமாற்றத்தோடு திரும்ப சென்றுள்ளனர்.