3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தம்பதி.. கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள்..!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணீஷ் குமார் , அவரது மனைவி மற்றும் 3, 5, 8 வயதுடைய மூன்று குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். நேற்று இரவு இவர்கள் பாலில் விஷம் கலந்து குடித்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.
இருப்பினும், உடற்கூறாய்வு முடிவுகள் அதிரவைக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. மணீஷ் மின்சாரம் பாய்ந்தும், அவரது மனைவி தூக்கிட்டும், மூன்று குழந்தைகள் கழுத்து நெரிக்கப்பட்டும் உயிரிழந்துள்ளதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்லோக் குமார் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பதற்கு முன் மணீஷ் பதிவு செய்த வீடியோவில், "நாங்கள் எங்கள் விருப்பப்படியே இறக்கிறோம், இதற்கு யாரும் காரணமல்ல; யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.
சமீபத்தில் ஒரு நிலத்தை 12 லட்ச ரூபாய்க்கு விற்றதாகவும், அதில் யாருக்கும் தொடர்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுவரில் எழுதப்பட்ட குறிப்பு மற்றும் டைரியையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva