1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. OPS visit to Gujarat today?

இன்று மாலை குஜராத் செல்கிறாரா ஓ.பன்னீர்செல்வம்?

OPS
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று மாலை குஜராத் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில் இன்று மாலை அம்மாநிலத்தில் முதலமைச்சர் பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அது மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு குஜராத் முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்து ஓ பன்னீர்செல்வம் இன்று மாலை குஜராத்திலுள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவின் வரி விதிப்பை ஏற்க உலக வர்த்தக அமைப்பு மறுப்பு