1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. OPS Team Support to Edappadi Palaniswami

எடப்பாடிக்கு ஓபிஎஸ் அணி ஆதரவு அளிக்க தயார்: மாஃபா பாண்டியராஜன் தகவல்!

எடப்பாடிக்கு ஓபிஎஸ் அணி ஆதரவு அளிக்க தயார்: மாஃபா பாண்டியராஜன் தகவல்!

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவில் தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ள நிலையில் தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு தொடருமா இல்லை ஆட்சி கவிழுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


 
 
இதுவரை 28 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்துள்ளனர். ஆனால் இவர்களில் எத்தனை பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்படுவார்கள் என்பது உறுதியாக தெரியாது. இந்த சூழலில் ஆட்சிக்கு ஆபத்து வந்தால் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என நேற்று மாஃபா பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 
 
மேலும் இது தொடர்பாக நேற்று திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்த மாஃபா பாண்டியராஜன், பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலைவந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
About Writer
Caston