ஆயிரம் ஸ்டாலின், ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது

ops
Last Updated: புதன், 8 மே 2019 (16:20 IST)
ஆயிரம் ஸ்டாலின், ஆயிரம் தினகரன் வந்தாலும் அ.தி.மு.க., அசைக்க முடியாது என்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பாறையூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தார். அரவக்குறிச்சி அடுத்துள்ள பாறையூர் பகுதியில் அவர் பேசும் பொது, மத்திய மாநில அரசு திட்டங்களை உங்களுக்கு அளிப்பவர் செந்தில்நாதன், வாக்காளர்களான நீங்கள் எடைபோட்டு வாக்களிக்க வேண்டும். ஆறு லட்சம் எளிய எளிய மக்களுக்கு கான்கீரீட் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு உணவு பாதுகாப்பை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக ஏற்படுத்தினார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க.வை தொட்டுகூட பார்க்க முடியாது. தமிழகத்தில் ஜீவாதார உரிமைகளை பறிபோக காரணமா இருந்தவர்கள் தி.மு.க., கட்சிதான். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது அ.தி.மு.க., அரசுதான் என்றும் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், இந்த இடைதேர்தல் தேவைதான துரோகத்திற்கு பெயர் போன செந்தில் பாலாஜி இங்கு போட்டியிடுகிறார். ஆயிரம் ஸ்டாலின் ஆயிரம் தினகரன் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. அதனால் வாக்காளர்கள் ஆகிய நீங்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பேசினார்.

சி.ஆனந்தகுமார்

 
 


இதில் மேலும் படிக்கவும் :