வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 மே 2019 (07:14 IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஓட்டலுக்கு கொண்டு சென்ற 4 போலீஸார் சஸ்பெண்ட்!

நேற்று கோவையில் இருந்து தேனிக்கு யன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பீகாரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஓட்டலுக்கு 4 போலீசார் கொண்டு சென்றதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீபத்தில் பீகார் உள்பட ஏழு மாநிலங்களில் 5ம் கட்டத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் பீகாரில் உள்ள முசாபர்பூர் என்ற நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை நடந்தபோது, வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானால், அதற்கு மாற்று இயந்திரங்கள் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
 
ஆனால், தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓட்டலில் வைக்கப்பட்டது தவறு என்பதால் அதற்கு காரணமாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் என மொத்தம் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் மீது விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.