1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 மே 2019 (09:17 IST)

திமுக - அமமுக கூட்டு சேர்ந்தால் அதிமுகவின் நிலை என்ன?

திமுக - அமமுக கூட்டு சேர்ந்தால் அதிமுகவின் நிலை என்னவாகும் என்பதை பற்றி எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
அமமுக அலுவலகத்தில் பணம் கைப்பற்றப்பட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கறிஞர் செல்வத்தைக் காண நேற்று தேனி சிறைக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார்.
 
அப்போது அவர் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவர 35 எம்.எல்.ஏக்கள் தேவை. 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம். ஆனால் திமுகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கமாட்டோம் என தெரிவித்திருந்தார். 
 
அப்படி திமுக - அமமுக இணைந்து செயல்பட்டால் அதிமுகவின் நிலை என்னவாகும் என முதலவர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
திமுக - அமமுக கூட்டு வைத்து செயல்படுவது, தங்க தமிழ்ச்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அதிமுக ஆட்சியை கவிழ்க்க இரண்டு பேரும் சேர்ந்தது திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் எங்கள் ஆட்சியை கவிழ்க்க முடியாது. 
 
தேர்தலுக்கு முடிவுகளுக்கு பின்னர் அதிமுக ஆட்சிதான் தொடரும். ஸ்டாலினின் கனவு எப்போதும் பலிக்காது. 22 தொகுதி சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். நாங்க மைனாரிட்டி ஆட்சி நடத்தவில்லை. எனது தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை ஆட்சி என பேசியுள்ளார்.