சசிகலா நினைத்திருந்தால் நான் முதல்வர் – டிடிவி தினகரன் அதிரடி !
தேர்தல் பிரச்சாரத்துக்காக சூலூர் சென்றுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலா நினைத்திருந்தால் நான் முதல்வராகி இருப்பேன் எனக் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியுள்ளது. இதில் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை எடப்பாடி அணியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இப்போது மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் பிரச்சாரத்துக்காக சூலூர் சென்ற டிடிவி தினகரன் ‘ முதல்வர் இறந்த பிறகு சசிகலா நினைத்திருந்தால் நான் முதல்வர் ஆகியிருப்பேன். ஆனால் கொங்குமண்டலத்தை சேர்ந்தவரான பழனிச்சாமி துரோகம் செய்யமாட்டார் என நம்பி அவரை முதல்வர் ஆக்கினார். ஆனால் அவர் கட்சிக்கும் மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டார். பாஜகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.