சசிகலாவை சந்தித்தது ஏன்? ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விளக்கம்!
சசிகலாவை திடீரென ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் சந்தித்த நிலையில் இந்த சந்திப்பு எதற்காக என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் இன்று காலை திடீரென தஞ்சாவூரில் சசிகலாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சசிகலாவுக்கு அவர் இனிப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இது ஒரு சாதாரண சந்திப்புதான் என்றும் அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும் என்று கூறுவதற்கான சந்திப்பு அல்ல என்றும் அரசியல் ரீதியாக அவரை சந்திக்கவில்லை என்றும் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்
தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலாவும் வைத்திலிங்கமும் தனித்தனியே வந்த போது எதிர்பாராதவிதமாக சந்தித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த சந்திப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது