ஓபிஎஸ் என்னை சந்திக்க வந்தால் வரவேற்பேன்: சசிகலா
ஓபிஎஸ் என்னை சந்திக்க வந்தால் வரவேற்பேன் என சசிகலா கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக தற்போது ஓபிஎஸ் பிரிவு, ஈபிஎஸ் பிரிவு என இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருக்கும் நிலையில் ஓபிஎஸ் பிரிவில் சசிகலா மற்றும் தினகரனை சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ஓபிஎஸ் என்னை சந்திக்க வந்தால் அவரை வரவேற்பேன் என்றும் அவர் மட்டுமல்ல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என்னை சந்திக்க விரும்புகின்றார்கள் என்றும் அதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் செய்தியாளர்களிடம் சசிகலா கூறியுள்ளார்
திருத்துறைப்பூண்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பதை பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.