வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (13:50 IST)

பார்த்துக் கொண்டும்.. சிரித்துக் கொண்டும்..! – சசிக்கலா- வைத்திலிங்கம் சந்திப்பு ஏன்?

Sasikala
சமீபத்தில் தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமும், சசிகலாவும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அதிமுக கட்சியில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.


இதுகுறித்த வழக்கில் தற்போது பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பாகியுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அனைவரும் இணைந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என பேசியிருந்த ஓபிஎஸ், சசிக்கலா, தினகரனுக்கும் அழைப்பு விடுப்பதாக கூறியிருந்தார்.

தற்போது தஞ்சையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கமும், சசிக்கலாவும் சந்தித்துக் கொண்டனர். அப்போது சசிக்கலா அவருக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் கட்சியில் சேர்ப்பது குறித்து பேசப்பட்டிருக்கலாம் என யூகங்கள் கிளம்பியது.

ஆனால் அதை தற்போது மறுத்துள்ள வைத்திலிங்கம், சசிக்கலாவை சந்தித்தது தற்செயல் நிகழ்வு என்றும், அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.