புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (12:58 IST)

இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்திற்கு முழு ஆதரவு: ஓபிஎஸ் அறிவிப்பு

OPS
இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்திற்கு முழு ஆதரவு தருவதாக சட்டசபையில் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
மத்திய அரசு இந்தியைத் திணித்து வருவதாக ஆளுங்கட்சியான திமுக குற்றம் சாட்டி வரும் நிலையில் இது குறித்த தீர்மானம் நேற்று சட்டசபையில் இயற்றப்பட்டது 
 
இந்த தீர்மானத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று வெளிநடப்பு செய்ததால் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை 
 
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இது குறித்து இன்று சட்டசபையில் பேசிய ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் ஹிந்தியை அனுமதிக்க மாட்டோம் என்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை முழுமனதாக அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran