1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 அக்டோபர் 2022 (08:14 IST)

எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும்: சசிகலா

Sasikala
எப்போது என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என எனக்கு தெரியும் என சசிகலா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுக தற்போது நான்கு அணிகளாக பிரிந்து உள்ளது. இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி மற்றும் டிடிவி தினகரன் அணி என நான்கு அணிகளாக பிரிந்து இருக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்படும்? எப்போது முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா  அதிமுக என்ற கட்சியை ஒருமைப்படுத்த எப்போது என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என எனக்கு தெரியும் என்று கூறினார் 
 
எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என இரு அணியாக இருந்த அதிமுகவை ஒற்றுமையாக மாற்றியது நான் தான் என்றும் அப்படிப்பட்ட எனக்கு இப்போது உள்ள அதிமுகவே ஒருமைப்படுத்துவது எப்படி என்று எனக்கு தெரியும் என்றும் கூறினார் 
 
மேலும் அதிமுகவில் தாய் உள்ளத்தோடு தற்போது யாரும் இல்லை என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.
 
Edited by Siva