1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (11:58 IST)

ஒருவேளை இதுதான் திராவிட மாடலோ? மின்கட்டண உயர்வு குறித்து ஓபிஎஸ் அறிக்கை!

ops
ஒருவேளை இதுதான் திராவிட மாடலோ? என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தேர்தல் அறிக்கையில் ஆயிரம் யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6 ஆயிரம் வரை பயனடையும் வகையில் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்த திமுக தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
 
எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல ஏற்கனவே பொதுமக்கள் பொருளாதார சிக்கலில் இருக்கும் நிலையில் தற்போது மின்கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியுள்ளது. இதை பார்க்கும்போது சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதுதான் திராவிட மாடலோ என நினைக்க தோன்றுகிறது.
 
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகவும் ஓபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்