செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (14:30 IST)

விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு: சுறுசுறுப்பாகும் அதிமுக-திமுக!

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளிவர விருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. செப்டம்பர் இறுதிக்குள் இந்த இந்த இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து விடும் என்றும் இது குறித்த அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளதால் இந்த தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன
 
நாங்குநேரி தொகுதியை பொறுத்தவரை அதிமுக தேர்தல் பணியை ஆரம்பித்து விட்டது என்று கூறலாம். பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் இருந்து அனைத்து பணிகளையும் மாவட்ட நிர்வாகம் தொடங்கி விட்டதாகவும், இந்த தொகுதியை எப்படியும் கைப்பற்றிய தீர வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் விட்டுக்கொடுக்காத தயாராக இல்லை என்றும் ஆனால் திமுக இந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் அந்தக் கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது
 
அதே போல் விக்கிரவாண்டி தொகுதியை திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கைப்பற்ற தீவிரமாக இருப்பதாகவும் அதற்கான பணியை அவர் தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது. அதிமுகவை பொறுத்தவரை இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்றும், இன்னும் இரண்டு வருடங்கல் ஆட்சியை நீட்டிக்க இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றி உதவியாக இருக்கும் என்றும் அதிமுக கருதுகிறது. மொத்தத்தில் இந்த இரண்டு தொகுதிகளிலும் பணம் தண்ணீராய் செலவழிக்க வாய்ப்பு இருப்பதாக  அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்