வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (13:59 IST)

மீண்டும் முதல்வராகிறார் ஓபிஎஸ்: பரபரப்பு தகவல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் வெளிநாட்டு பயணம் செல்லப் போவதாகவும், அவர் திரும்பி வரை முதல்வர் பொறுப்பை வேறொருவர் கவனிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர் அங்கு உள்ள தொழிலதிபர்களிடம் தொழில் முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தெரிகிறது. இவ்வாறு அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் நாளில் தமிழகத்தில் முதல்வர் பொறுப்பை ஏற்க போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது
 
சமீபத்தில் சென்னைக்கு வந்த அமித்ஷா இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்த போது, ஓபிஎஸ் அவர்களையே தற்காலிக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்தாராம். எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஓபிஎஸ் அவர்களள முதல்வராக்க விருப்பமில்லை என்றாலும் அமித்ஷாவின் பேச்சை தட்டமுடியாமல் அவர் ஓகே கூறியதாக கூறப்படுகிறது 
 
இருப்பினும் கடைசி நேரத்தில் அமைச்சர்கள் தங்கமணி அல்லது வேலுமணி ஆகிய இருவரில் ஒருவருக்கு முதல்வர் பதவி செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. ஒருவேளை ஓபிஎஸ் தனக்கு தற்காலிய முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் அவரது ரியாக்சன் வேறு மாதிரியாக இருக்கும் என்றும் கூறப்படுவதால் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது