வெள்ளி, 13 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva

க்ரீன்லாந்து விவகாரத்தில் ஒத்துழைக்காத நாடுகளுக்கு கூடுதல் வரி: டிரம்ப் அச்சுறுத்தல்..!

க்ரீன்லாந்து விவகாரத்தில் ஒத்துழைக்காத நாடுகளுக்கு கூடுதல் வரி: டிரம்ப் அச்சுறுத்தல்..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கின் சுயாட்சி பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்திற்கு ஆதரவு தராத நாடுகள் மீது புதிய வரிகள் விதிக்கப்படும் என்று அதிரடியாக எச்சரித்துள்ளார். 
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர், "அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து மிகவும் அவசியம். இந்த விவகாரத்தில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கவும் நான் தயங்கமாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க சிறப்பு படைகள் சிறைபிடித்த சம்பவத்தை தொடர்ந்து, டிரம்பின் இந்த ஆக்கிரமிப்பு போக்கு உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்க்டிக் பகுதியில் சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை காரணம் காட்டி, கிரீன்லாந்தை  கையகப்படுத்த அமெரிக்கா விரும்புவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்துவது ஒரு வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
 
இருப்பினும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் இந்த திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ளனர். "கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல" என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ள நிலையில், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன், "நாங்கள் அமெரிக்காவை விட டென்மார்க்கையே தேர்வு செய்கிறோம்" என்று உறுதிபட கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான நகர்வு நேட்டோ கூட்டணியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் என்று ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.
 
 
Edited by Siva