செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (14:23 IST)

சட்டசபையை மொத்தமாக நாளைக்கே முடிச்சிக்கலாம்.. – ஓபிஎஸ் அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் ஹேப்பி!

கொரோனா முன்னெச்சரிக்கையாக சட்டசபை கூட்டத்தொடரை முன்னதாகவே முடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டு வந்த நிலையில் ஓபிஎஸ் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவதால் சட்டசபை கூட்டத்தை ஒத்தி வைக்கும்படி எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் இதை வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் தொடரும் நாட்களில் நடைபெறும் சட்டமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள போவதில்லை என்று கடிதம் எழுதி சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனைத்து பட்ஜெட் அறிவிப்புகளையும் நாளைய சட்டசபையில் முடித்துக் கொண்டு நாளையுடன் சட்டசபையை முடித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

எதிர்கட்சிகள் தொடர்ந்து சட்டசபை கூட்டத்தை முடித்துக் கொள்ள கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.