1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (13:25 IST)

முற்றிலுமாக முடங்குகிறதா தமிழகம்?

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முற்றிலுமாக முடக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ள நிலையில், மக்கள் வீட்டிலேயே இருந்தால் தமிழகம் முற்றிலுமாக முடங்கும் என தெரிகிறது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிகப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளும் இந்த வைரஸை குணப்படுத்த மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைய தொடங்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுக்குள் வைக்க பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தை பொருத்தவரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள் உள்பட பல முக்கியமான மக்கள் கூடும் இடங்கள் மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளது. 
 
மெட்ரோ, ரயில் சேவை, வங்கி சேவை, நகைக்கடைகள் ஆகியவையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனைத்தொடர்ந்து தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் மார்ச் 31 வரை இயக்கப்படாது என ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
அதொடு, தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை குறைந்த அளவு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முற்றிலுமாக முடக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ள நிலையில், மக்கள் வீட்டிலேயே இருந்தால் தமிழகம் முற்றிலுமாக முடங்கும் என தெரிகிறது.