வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (14:25 IST)

ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை: ஓபிஎஸ் வாக்குமூலம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் நேற்று ஆஜரான ஓ பன்னீர்செல்வம் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்
 
இந்த நிலையில் இன்றும் அவர் ஆஜராகி பல விஷயங்களை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள ஓபிஎஸ் பொதுமக்களிடையே அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுந்ததால் தான் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தேன் என்றும் அவர் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சசிகலா மீது இப்போதும் தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் உண்டு என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது