செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (12:46 IST)

இடைத்தேர்தல் படிவத்தில் கைரேகை வைத்தது ஜெ.தான்: ஓபிஎஸ்!

இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் என  ஓபிஎஸ் வாக்குமூலம். 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக ஆஜராகினார். 
 
இந்நிலையில் இன்று விசாரணையின் போது இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் என  ஓபிஎஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி வேட்பாளரை தேர்வு செய்ததும் ஜெயலலிதா தான் எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
 
இந்த விசாரணைக்கு பின்னர் சசிகலா தரப்பு வழங்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.