1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (13:43 IST)

பல ரகசிங்களை வெளியே சொல்ல போகிறோம்.. ஓபிஎஸ் அதிரடி..!

ops
கட்சியின் நலனுக்காக பொறுமை காத்தோம், இனி பல ரகசியங்களை மக்களை சந்திக்கும் போது சொல்லப் போகிறோம் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பொது குழு குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் அதில்   பொதுக்குழு செல்லும் என்றும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்பது அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சட்டபூர்வமாக அதிமுக சென்றுவிட்டது என்பது உறுதியாகி உள்ளது 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் கட்சி உடைய கூடாது என்று பொறுமை காத்தோம் என்றும் ஆயிரம் இருக்கிறது வெளியே சொல்வதற்கு என்று ஒவ்வொன்றாக வெளியே வரும் என்றும் மக்களை சந்திக்கும் போது பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
கூவத்தூரில் என்ன நடந்ததோ அப்படி கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள் என்றும் இது ஓபிஎஸ் தாத்தா அல்லது இபிஎஸ் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல தொண்டர்களுக்காக எம்ஜிஆர் தொடங்கிய கட்சி என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran