1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ops says about admk trichy conference

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் மாநாடு.. சசிகலா, தினகரனுக்கு அழைப்பு என தகவல்..!

அதிமுக
அதிமுகவின் ஓபிஎஸ் பிரிவு தற்போது அதிமுகவை மீட்க சட்ட நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் கிட்டத்தட்ட அதிமுக எடப்பாடி பழனிசாமி வசம் சென்று விட்டது என்பதை தெரிந்ததே
 
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார் என்பதும் கிட்டத்தட்ட அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமி பிரிவுதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் மக்களிடம் சென்று நியாயம் கேட்போம் என்று கூறிவந்த ஓபிஎஸ் திருச்சியில் வரும் 24ஆம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். சர்வாதிகார கும்பல் அதிமுகவில் சட்டவிதிகளை அபகரித்ததை நீக்கும் மாநாடாக இந்த மாநாடு அமையும் என்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். மேலும் இந்த மாநாட்டில் சசிகலா தினகரன் உள்ளிட்ட அனைவரையும் அழைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் 4வது கொரோனா அலையா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்