1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (08:06 IST)

நான் மத்திய அமைச்சர் ஆவதை தடுத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி: ஓபிஎஸ் ரவீந்திரநாத்

ravindranath
நான் மத்திய அமைச்சர் ஆவதை தடுத்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்றும் அவர் சுயநலம் மிக்கவர் என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஓபிஎஸ் ரவீந்திரநாத் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தனது தந்தை போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அவரது பெயரில் பலரை வேட்பாளர்களாக களம் இறக்கி உள்ளனர் என்று ஓபிஎஸ் ரவீந்திரநாத் குற்றம் காட்டினார் மேலும் இந்த குழப்பத்திற்கு வேட்புமனு பரிசீலனையில்  உண்மை நிலை தெரிந்து விடும் என்றும் அவர் கூறினார்

எடப்பாடி பழனிச்சாமி சுயநலத்தால் கட்சியை அபகரித்துக் கொண்டார் என்றும் 2019 ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே வேட்பாளர் என்பதால் எனக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க மோடி முன் வந்தார் என்றும் ஆனால் நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு எடப்பாடி பழனிச்சாமி ஆல் தான் பறிபோனது என்றும் அவர் கூறினார்

மேலும் போடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் நான் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva