அதிமுகவில் சேர நான் தயார்!. என்னை சேர்த்திக்கிட்டா!.. மனம் திறந்து பேசும் ஓபிஎஸ்!...
அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ பன்னீர்செல்வம். ஆனால் சசிகலா தயவால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின் ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டார். பாஜக தலைமை எடுத்த முயற்சியால் பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் ஒருங்கிணைந்து அதிமுகவை வழிநடத்தி வந்தாலும் ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் மீது அதிருப்தி அடைந்த பழனிச்சாமி அவரை கட்சியிலிருந்து நீக்கினார்.
அதன்பின் தனியாக செயல்பட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். மேலும் ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் சசிகலா ஆகியோரிடம் நெருக்கம் காட்டினார்.. அதோடு கடந்த சில தேர்தல்களில் சுயேட்சையாகவும் போட்டியிட்டு அதிமுக வாக்குகளை பிரித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கிறது.. எனவே பாஜக தலைமை மூலம் மீண்டும் இந்த கூட்டணியில் இணைய ஓபிஎஸ் எடுத்த எல்லா முயற்சிகளும் தோற்றுப் போனது.. ஏனெனில் ஓபிஎஸ்-ஐ இந்த கூட்டணிகளில் விடக்கூடாது என்பதில் பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் எங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டால் எல்லா வழக்குகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். பராளுமன்ற தேர்தலில் தொண்டர்களின் ஆதரவு பலத்தை தெரிந்துகொள்வதற்காகவே சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டேன். என்னை அதிமுவில் இணைக்கும் முயற்சியை டிடிவி தினகரன் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இணைய நான் தயார், சேர்த்துக்கொள்ள அவர்கள் தயாரா? என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும் என சொல்லியிருக்கிறார்.