திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 மார்ச் 2024 (19:04 IST)

பாமகவால் தான் அதிமுக 36 தொகுதிகளில் வென்றது: ஈபிஎஸ்-க்கு அன்புமணி பதிலடி

அதிமுக ஆதரவு காரணமாகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி நான்கு தொகுதிகளை வென்றது என்று எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய போது அதற்கு பதிலடியாக பாமக தலைவர் அன்புமணி. பாமகவால்தான் அதிமுக 36 தொகுதிகளில் வென்றது என்று கூறியுள்ளார்.

10. 5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக தான் அதிமுக 66 தொகுதிகளை வென்றது என்றும் அதில் 36 தொகுதிகள் பாமா  பங்களிப்பு இல்லை என்றால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்

அதிமுக ஆதரவால் நாங்கள் நான்கு தொகுதிகளை வென்றோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம், ஆனால் அதே நேரத்தில் பாமக இல்லை எனில் அதிமுக 36 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்காது என்று கூறினார்

கடந்த ஆறு மாதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் சீமான் கட்சியையும் கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைத்துக் கொண்டு இருந்தார் என்றும் அவர்கள் யாரும் வரவில்லை என்ற பிறகு தான் எங்களை கூட்டணிக்கு அழைத்தார் என்றும் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்

Edited by Mahendran