1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (08:00 IST)

ஒருவர் ஜெயிலில்.. இன்னொருவர் வேடந்தாங்கல் பறவை போல்.. கரூர் குறித்து அண்ணாமலை விமர்சனம்..!

annamalai
கரூர் மாவட்ட திமுக செயலாளர் ஜெயிலில் இருக்கிறார் என்றும் கரூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி வேடந்தாங்கல் பறவை போல அவ்வப்போது தொகுதி பக்கம் வந்து செல்கிறார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறார்
 
கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் ஜோதிமணி போட்டியிடும் நிலையில் அவர் தொகுதி பக்கமே வருவதில்லை என்று அந்த தொகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
 
இது குறித்து கருத்து கூறிய அண்ணாமலை, கரூர் எம்பி ஜோதிமணி தொகுதி பக்கமே வருவதில்லை என்றும் வேடந்தாங்கல் பறவை சீசனுக்கு மட்டும் வந்து செல்வதை போலவே ஜோதிமணி கரூர் தொகுதிக்கு வந்து செல்கிறார் என்றும் கூறியிருந்தார்

அதேபோல் கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக அறிவித்த 521 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் அப்படி நிறைவேற்றி விட்டதாக முதல்வர் கூறினால் அதை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

Edited by Siva