1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (08:58 IST)

சார் இன்னைக்காவது லீவு குடுங்க..! – மறுபடியும் விருதுநகர் ஆட்சியரிடம் மன்றாடிய விஜய் ரசிகர்!

தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் விருதுநகரில் லீவு கேட்ட விஜய் ரசிகருக்கு மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள பதில் வைரலாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் 29 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்ட விஜய் ரசிகர் ஒருவர் “விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் நலன் கருதி (18.11.21) விடுமுறை அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டியை டேக் செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆட்சியர் “விடுமுறை கிடையாது. இரவில்தான் மழை பெய்கிறது. பகலில் வெயில் வீசுகிறது” எனக் கூறியுள்ளார். இதுபோல் முன்னதாக விஜய் ரசிகர் ஒருவர் விடுமுறை குறித்து கேள்வி எழுப்பியபோது பள்ளிக்கு போக சொல்லி ஆட்சியர் மேகநாத் ரெட்டி கூறியது வைரலானது குறிப்பிடத்தக்கது.