தொடர்புடைய செய்திகள்
- மோடியின் காலில் விழுந்த ஓபிஎஸ் மகன் !
- அ.தி.மு.க., வேட்பாளர் மு.தம்பிதுரை பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்
- தேர்தல் செலவுக்கு பணமில்லாமல் அல்லாடும் தேமுதிக? கண்டுக்கொள்ளாத தலைமை
- பல்ப் வாங்கும் பாஜக: கல்லடி வாங்கிய நயினார் நாகேந்திரன்?
- அம்மா இருந்திருந்தால் கொடுத்திருப்பார்! அரவக்குறிச்சி வேட்பாளர் யார் ? அ.தி.மு.கவில் நீடிக்கும் ’சஸ்பென்ஸ்’
வாரிசு அரசியலை ஒழிப்போம் – தேனியில் மோடி காமெடி !
இன்று தமிழகம் வந்துள்ள மோடி தேனியில் ஒபி ரவிந்தரநாத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் போது வாரிசு அரசியலை ஒழிப்போம் எனப் பேசியுள்ளார்.
முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வரும் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. பிரச்சாரம் 16 ஆம் தேதியுடன் முடிவடைவதால் சுட்டெரிக்கும் வெயிலிலும் அரசியல்வாதிகள் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து தேசிய தலைவர்களான மோடி, ராகுல் அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்திற்கு வருகை புரிந்து கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று தமிழகம் வந்த மோடி தேனியில் ஓபி ரவிந்தரநாத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்’ காங்கிரஸும் திமுகவும் என்னால் நிம்மதி இல்லாமல் உள்ளனர். காங்கிரஸின் நிதியமைச்சராக சிதம்பரம் இருந்த போது அவரது மகன் இந்த நாட்டைக் கொள்ளையடித்தார். இந்தியா வளர்வதைக் காங்கிரஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி குடும்ப அரசியலை பாஜக ஒழிக்கும்’ எனக் கூறினார்.
ஓபிஎஸ்-ன் வாரிசான ரவிந்தரநாத்துக்கு பிரச்சாரம் செய்த மேடையிலேயே மோடி வாரிசு அரசியலை ஒழிப்போம் எனக் கூறியுள்ளது சமூகவலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
