வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (15:25 IST)

இலங்கை குண்டுவெடிப்பு: ஓபிஎஸ், ஈபிஎஸ், ஸ்டாலின் கண்டனம்

இலங்கையில் உள்ள மக்கள் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடி வந்த நிலையில் இன்று காலை ஆறு இடங்களிலும் சற்றுமுன் இரண்டு இடங்களிலும் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த குண்டுவெடிப்புக்கு கண்டும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இந்த குண்டுவெடிப்பு குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக் வெளியிட்ட அறிக்கையில், 'இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தோம் என்றும், மனிதாபிமானமற்ற முறையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை என்றும், இந்த தாக்குதல்களில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூர தாக்குதல் கண்டனத்திற்குரியது என்றும் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் பின்னணியில் உள்ள சக்தியை அடையாளம் கண்டு கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், வழிபாட்டுத்தலங்களை குறிவைத்து தாக்கும் போக்கு, மனிதநேயத்திற்கு விடப்பட்ட பெரும் சவால் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.