1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 ஜூலை 2023 (09:36 IST)

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து ஆர்ப்பாட்டம்: அதிரடி அறிவிப்பு..!

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து ஆர்ப்பாட்டம்: அதிரடி அறிவிப்பு..!
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணையை தீவிர படுத்த வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது 
 
இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதே தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் மிகவும் நேசித்த இடமான கோடநாட்டில் அவரது மறைவுக்கு பின் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை குற்றங்கள் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆட்சிக்கு வந்த 90 நாட்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் இந்த வழக்கில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத வகையில் மெத்தனபோக்கோடு  திமுக அரசு தூங்கி வழிகிறது.
 
எனவே அரசின் மெத்தன போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி காலை 10:30 மணி அளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் சொல்லும் தலை மேலான அணியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva