திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (20:06 IST)

''நடப்பது பொம்மை முதல்வரின் சர்க்கஸ் அரசு தான்''- அதிமுக

நடப்பது பொம்மை முதல்வரின் சர்க்கஸ் அரசு தான் என்பதை நித்தம் ஒரு அமைச்சர் உறுதி செய்வதற்கு நன்றி! என்று அதிமுக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘'இந்த விடியா முதல்வரின்' ஆட்சியில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை யாரும் பொய் பிரச்சாரம் செய்ய தயங்குவதில்லை ,மணிப்பூர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் நேற்றே தனது கடும் கண்டனங்களை தெரிவித்துவிட்ட நிலையில், எதிர்கட்சித் தலைவர் மணிப்பூர் குறித்து பேசவே இல்லை என்று அமைச்சர்  தங்கம் தென்னரசு கூறி இருப்பது மிக மோசமான ஏமாற்று வேலை !

இந்த சமுகவலைதள  யுகத்தில் கோமாளித்தனமானதும் கூட…!

நடப்பது பொம்மை முதல்வரின் சர்க்கஸ் அரசு தான் என்பதை நித்தம் ஒரு அமைச்சர் உறுதி செய்வதற்கு நன்றி!

அது சரி…, மணிப்பூர் குறித்து கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினாரா என கேள்வி கேட்பவர்கள், மேகதாது அணை கட்ட ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையோ , தன் பக்கத்தில் உட்கார்ந்து மகிழ்ந்து குலாவிய கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவக்குமாரருக்கு எதிராகவோ  மு.க.ஸ்டாலின்  இதுவரை வாய்திறக்காதது ஏன் என்று கேள்வி கேட்பார்களா ??’’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.