வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (22:56 IST)

கொடநாடு கொலை வழக்கு: ஓபிஎஸ் - டி.டி.வி. தினகரன் இணைந்து போராட்டம்!

ttv dinakaran-pannersalvam
கொடநாடு கொலை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி, ஓபிஎஸ் அணி சார்பில்  ஆகஸ்ட் 10 ஆம் தேதி    நடைபெறும்  போராட்டத்தில் டிடிவி. தினகரன் பங்கேற்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருடு போன தாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஏற்கனவே பலரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த   நிலையில், சமீபத்தில், அதிமுகவின் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொ.செயலாளர்  டிடிவி. தினகரன் ஆகிய இருவரும்  இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்த  நிலையில், கொடநாடு கொலை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி, ஓபிஎஸ் அணி சார்பில்    ஆகஸ்ட் 10 ஆம் தேதி   போராட்டம்   நடத்த முடிவெடுக்கப்பட்டது.

தேனியில் நடைபெறும் இப்போராட்டத்தில்  கலந்து கொள்ள   அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

எனவே இருவரும் இணைந்து இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது.