1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. congress not participate in vaiko padayatra

வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் படம்: அதிருப்தியில் புறக்கணித்த காங்கிரஸ்!

வைகோ நடைபயணம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மாபெரும் நடைபயணம் இன்று திருச்சியில் தொடங்கிய நிலையில், இதில் கலந்துகொள்ளாமல் காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த விழாவிற்கு திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நடைபயண அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்ததே காங்கிரஸ் கட்சியின் இந்த அதிருப்திக்கு முதன்மையான காரணமாக சொல்லப்படுகிறது.
 
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரபாகரன் படம் இடம்பெற்றிருப்பதாலேயே தாங்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மாநில தலைவர்கள் மட்டுமின்றி, மாவட்ட மற்றும் இதர காங்கிரஸ் நிர்வாகிகளும் இந்த தொடக்க விழாவை திட்டமிட்டுப் புறக்கணித்தனர். .
 
2026 தேர்தலை நோக்கிய பயணத்தில் இத்தகைய கருத்தியல் மோதல்கள் கூட்டணிக்கட்சிகளுக்குள்ளே ஒருவித நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஒரு பெண்ணின் ஒரு நாள் உரிமை என்பது வெறும் ரூ.33 தானா? ரூ.1000 உரிமை தொகை குறித்து நந்தகுமார் கேள்வி..!