சோத்த திங்கிறியா இல்ல... இந்து அமைப்பினரிடம் கடுப்பாகி கத்திய சேகர் பாபு!...
தமிழகத்தில் திமுக அரசு நடந்து வரும் நிலையில் அந்த கட்சியின் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர் பாபு. வட சென்னையை சேர்ந்த இவர் திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்களில் ஒருவர். ஜெயம் ரவி நடித்து வரும் கராத்தே பாபு படம் கூட சேகர் பாபுவை நியாபகப்படுத்தியது. இதை அவரே ஜெயம் ரவியிடமும் சொன்னார்.
சேகர் பாபு முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். இன்னும் சொல்லப்போனால் முதல்வர் ஸ்டாலினுக்கு வலது கரம் போன்றவர். எங்கேனும் ஏதேனும் போராட்டம், பிரச்சனை என்றால் திமுக சார்பாக போய் பேச்சு வார்த்தை நடத்துவது சேகர பாபுவின் வழக்கம். சில நாட்களுக்கு முன்பு அரசு வேலை உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம் நடத்தியபோதும் பேச்சுவார்த்தை நடத்த சேகர் பாபு போனார். அதற்கு செவிலியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் நடந்தது..
பொது இடங்களில் கோபமாக பேசுவது சேகர் பாபுவின் வழக்கம். சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களில் ஒருவரை அமைச்சர் சேகர் பாபு திட்டிய வீடியோ இணையத்தில் வெளியானது. தற்போது இந்து அமைப்பினரிடம் சேகர் பாபு கோபப்பட்டு பேசிய வீடியோ வெளியாகியிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமலையன் சுவாமி திருக்கோயில் மார்கழி மாத தேரோட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் சேகர் பாபு இன்று சென்றபோது அங்கு அவருக்காக காத்திருந்த இந்து அமைப்பை சேர்ந்த சிலர் பாரத் மாதா கி ஜே என கோஷம் எழுப்பினார்கள். இதனால் கோபமடைந்த சேகர் பாபு 'சோத்தை திங்கிறீயா இல்ல' என அவர்களை திட்டினார். இந்த வீடியோவை பகிர்ந்து திமுக அமைச்சர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என பாஜகவினர் சமூகவலைகளில் பதிவிட்டு வருகிறார்கள்.